தமிழ்மொழி பாடத்திட்டம்
அறிவாலயம் தமிழ்ப் பாடசாலை, ஐக்கிய இராச்சியத்தில் தமிழ்மொழிக் கல்வியை மேம்படுத்தும் தமிழர் கலைக் கல்வி நடுவத்துடன் (TAEC) இணைந்து செயல்படுகிறது.
எமது பாடசாலையில் மாணவர்கள் எழுதும் தமிழ்மொழித் தேர்வுகள் அனைத்தும் TAEC நிறுவனத்தின் தரநிலைகள், தேர்வு அட்டவணை மற்றும் பாடத்திட்டத்திற்கு அமைவாக நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகளில் சிறப்பாகச் சித்தியடையும் மாணவர்களுக்கு TAEC சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
நுண்கலை பாடத்திட்டம்
தமிழ்மொழிக் கல்வியுடன் இணைந்து, மாணவர்களின் கலைத்திறன்களையும் வளர்க்கும் நோக்கில் எமது பாடசாலையில் பல்வேறு நுண்கலைப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.
பரதநாட்டியம், சங்கீதம் மற்றும் வீணை, வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், சுரத்தட்டு போன்ற இசைக்கருவிகளுக்கான பயிற்சிகளும் லண்டன் ஓரியண்டல் நுண்கலைக் கல்லூரியின் (Oriental Fine Arts Academy of London – OFAAL) பாடத்திட்டங்களுக்கு அமைவாக வழங்கப்படுகின்றன.
OFAAL பாடத்திட்டத்தின் ஊடாக, மாணவர்கள் தமது கலைத்திறன்களைப் படிப்படியாக வளர்த்துக்கொள்வதுடன், செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வுகளிலும் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இத்தேர்வுகளில் சித்தியடையும் மாணவர்களுக்கு OFAAL சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.
நுண்கலைப் பாடங்களைக் கற்கும் எமது மாணவர்கள், கோவில் திருவிழாக்களிலும் ஏனைய கலை நிகழ்வுகளிலும் பங்கேற்று, தமது கலைத்திறன்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நடனம், சங்கீதம், இசைக்கருவி வாசித்தல், நாடகம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை எமது மாணவர்கள் பல்வேறு அரங்கங்களிலும் கோவில்களிலும் சிறப்பாக நிகழ்த்தி வருகின்றனர். இத்தகைய நிகழ்வுகள், மாணவர்கள் தமது கலைத்திறன்களை மேலும் வளர்த்துக்கொள்வதற்கும், தமிழர் கலை மற்றும் பண்பாட்டு மரபுகளைப் பேணிப் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்கும் வழிவகுக்கின்றன.








