எமது வளர்ச்சி

எமது தமிழ் பாடசாலையின் வளர்ச்சிப் பயணம் பெருமையும் மகிழ்ச்சியும் நிறைந்த ஓர் அழகிய சாதனைப் பயணம்!

2024 ஆம் ஆண்டு, 16 மாணவர்களுடனும் அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்களுடனும் எளிமையாகத் தொடங்கிய எமது அறிவாலயம் தமிழ் பாடசாலை, இன்று 60-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் வளர்ந்து, தமிழ்மொழியையும் கலைகளையும் போற்றிப் பாதுகாத்து, எமது பாரம்பரியம், பண்பாடு மற்றும் உயர் விழுமியங்களை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் பாடசாலையாகத் திகழ்கின்றது.

இது மாணவர்களின் எண்ணிக்கை வளர்ச்சி மட்டுமல்ல; தமிழ்மொழியின் மீதான பற்றும் கலைகளின் மீதான ஆர்வமும் எமது பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியும் ஒன்றிணைந்து உருவாக்கிய மகத்தான வளர்ச்சியாகும்.

இந்த அழகிய பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் அர்ப்பணிப்புடன் உழைக்கும் எமது ஆசிரியர்களின் அயராத முயற்சியும், ஆர்வத்துடன் கற்கும் மாணவர்களின் ஈடுபாடும், உறுதுணையாக நிற்கும் பெற்றோரின் ஒத்துழைப்பும், அன்போடு ஆதரவு வழங்கும் நலன் விரும்பிகளின் பங்களிப்பும் அளப்பரியவை. அனைவரினதும் அர்ப்பணிப்பும் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் இணைந்ததாலேயே இன்று எமது பாடசாலை நம்பிக்கையுடன் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகின்றது.

ஒரு சிறிய விதையாகத் தொடங்கிய எமது பாடசாலை, இன்று பல கனவுகளையும் நம்பிக்கைகளையும் தாங்கி நிற்கும் விருட்சமாக வளர்ந்துள்ளது.

இந்த வளர்ச்சி எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் தருகின்றது.

தமிழ்மொழி வாழ வேண்டும்!

தமிழ்க்கலைகள் தழைத்தோங்க வேண்டும்!

எமது பண்பாடும் பாரம்பரியமும் அடுத்த தலைமுறையினரால் பெருமையுடன் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்!

என்ற உயரிய இலட்சியத்துடன், எமது அறிவாலயம் தமிழ் பாடசாலை, இன்னும் பல மாணவர்களின் வாழ்வில் அறிவொளி ஏற்றி, தமிழ்மொழியின் பெருமையையும் எமது பண்பாட்டு மரபின் சிறப்பையும் உலகறியச் செய்யும் அறிவாலயமாகத் தொடர்ந்து வளரட்டும்!

இந்த வளர்ச்சிப் பயணத்தில் பங்களித்த ஒவ்வொருவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளும் வாழ்த்துகளும்!

administartion webp

நிர்வாகம்

teachers 2

தமிழ் ஆசிரியர்கள்

அய்ல்ஸ்பரி அறிவாலயம் பாடசாலை கீதம்

வாழிய வாழிய வாழியவே, அய்ல்ஸ்பரி அறிவாலயம்

வாழிய வாழிய வாழியவே, அய்ல்ஸ்பரி அறிவாலயம்

வையகம் என்னும் போற்றிடவே நீ வாழிய வாழிய வாழியவே

வையகம் என்னும் போற்றிடவே நீ வாழிய வாழிய வாழியவே

வாழிய வாழிய வாழியவே, அய்ல்ஸ்பரி அறிவாலயம்

வாழிய வாழிய வாழியவே, அய்ல்ஸ்பரி அறிவாலயம்

செந்தமிழ் சுவைத்து மகிழ்ந்திடவே, நாம் சேர்ந்து இங்கு கற்றிடுவோம்

செந்தமிழ் சுவைத்து மகிழ்ந்திடவே, நாம் சேர்ந்து இங்கு கற்றிடுவோம்

அந்தமும் இல்லை, அவனியில் என்றும், அனைத்துமே நாம் வென்றிடுவோம்

அந்தமும் இல்லை, அவனியில் என்றும், அனைத்துமே நாம் வென்றிடுவோம்

வாழிய வாழிய வாழியவே, அய்ல்ஸ்பரி அறிவாலயம்

வாழிய வாழிய வாழியவே, அய்ல்ஸ்பரி அறிவாலயம்

அன்புடன் அறிவும் திறம்படவே நாம் ஆசிகள் இங்கு பெற்றிடுவோம்

அன்புடன் அறிவும் திறம்படவே நாம் ஆசிகள் இங்கு பெற்றிடுவோம்

நன்னெறை ஆளுமை வளர்த்திடவே, தமிழ்மொழி கலையும் கற்றிடுவோம்

நன்னெறை ஆளுமை வளர்த்திடவே, தமிழ்மொழி கலையும் கற்றிடுவோம்

வாழிய வாழிய வாழியவே, அய்ல்ஸ்பரி அறிவாலயம்

வாழிய வாழிய வாழியவே, அய்ல்ஸ்பரி அறிவாலயம்

நல்லறம் கற்று நாளுமே வெல்ல நல்லொளி இங்கு ஏற்றிடுவோம்

நல்லறம் கற்று நாளுமே வெல்ல நல்லொளி இங்கு ஏற்றிடுவோம்

வல்லமை பெற்று சொல்லுடன் பொருளும் மிளிர்ந்திட கலைமை கற்றிடுவோம்

வல்லமை பெற்று சொல்லுடன் பொருளும் மிளிர்ந்திட கலைமை கற்றிடுவோம்

வாழிய வாழிய வாழியவே, அய்ல்ஸ்பரி அறிவாலயம்

வாழிய வாழிய வாழியவே, அய்ல்ஸ்பரி அறிவாலயம்

சீர்பல பெற்று வாழ்ந்திடவே, சிறப்புடன் இலட்சியம் வென்றிடுவோம்

சீர்பல பெற்று வாழ்ந்திடவே, சிறப்புடன் இலட்சியம் வென்றிடுவோம்

நேர்பட உழைத்து வளர்ந்திடவே, நேர்த்தியாய் நாம் தமிழ் கற்றிடுவோம்

நேர்பட உழைத்து வளர்ந்திடவே, நேர்த்தியாய் நாம் தமிழ் கற்றிடுவோம்

வாழிய வாழிய வாழியவே, அய்ல்ஸ்பரி அறிவாலயம்

வாழிய வாழிய வாழியவே, அய்ல்ஸ்பரி அறிவாலயம்

வையகம் என்னும் போற்றிடவே நீ வாழிய வாழிய வாழியவே

வையகம் என்னும் போற்றிடவே நீ வாழிய வாழிய வாழியவே

வாழிய வாழிய வாழியவே, அய்ல்ஸ்பரி அறிவாலயம்

வாழிய வாழிய வாழியவே, அய்ல்ஸ்பரி அறிவாலயம்

உருவாக்கம் - திருமதி. நிவேதா யுகந்தன்

வாழ்த்துச் செய்திகள்

pulavar headshot copy

புலவர் சிவநாதன்

‘அன்பே தமிழ்! அதிலே அமிழ்!’

என் அன்பிற்கும் நம்பிக்கைக்குமுரிய ‘அறிவாலயம்’ தமிழ்ப்பாடசாலைத் தமிழுறவுகளே! வணக்கம் உங்கள் பணிகளிலும் பயணத்திலும் என்னையும் இணைத்துக் கொள்கின்ற உங்கள் பாசம் நிறைந்த உறவிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் என்றென்றும் உரியதாகுக ‘அறிவாலயம் தமிழ்ப் பாடசாலை’ தனது தொடர்ச்சியான வளர்ச்சிப் பாதையில்… இன்று.. தனக்கான ஓர் இணையத்தளத்தினை உருவாக்குவதறிந்து பெருமகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்! எமது தொன்மையின் தொடர்ச்சியின் இயங்குநிலையை உறுதிபலபடுத்துகின்ற.. அதற்கான இயக்கச் சூழலை வாய்ப்புகளை வளங்களை உருவாக்குகின்ற செயற்பாடுகளில் ஒன்றாகவே அறிவாலயம் தமிழ்ப்பாடசாலை நிர்வாகத்தினர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்களின் இந்த முயற்சியை முன்னகர்வினை நாம் புரிந்து கொள்கிறோம்! ‘தமிழ்மொழிக் கல்வி’யின் அவசியத்தைத் தரணிப்பரப்பிற் பரப்பவும்.. ‘அறிவாலயத்தின்’ ஆசிரிய மாணவர்களின் தமிழியல் இயக்கத்தினை ஆளுமை உருவாக்கச் செல்நெறியினை உலகத் தமிழர் சமூகத்துடன் இணைத்துக் கொள்ளவும் அச்சமூகத்துடன் இணைந்து பணியாற்றவும் நீங்கள் எடுக்கின்ற இந்த முயற்சி பாராட்டுக்குரியது! இந்த முயற்சி.. எமது பண்பாட்டுச் செவ்வியல் நுண்ணறிவையும் செம்மொழித் தகைமைகளையும் தாங்கியவாறு…இன்றைய செய்யறிவோடு அறிவாலயம் இணைந்து செயற்பட வழிவகுக்கும் என நம்புகிறேன்! உங்கள் தமிழ் மொழி அனுபவமும் அறிவும் ஆற்றலும் உங்கள் பணிகளும் மென்மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்!
அன்புரிமையுடன் புலவர் சிவநாதன் 15.10.2026.

thirumagal

திருமதி. திருமகள் சிறீபத்மநாதன்

அறிவொளி பரப்பி தமிழ்மொழி ஓங்குக…

அறிவாலயம் தமிழ்ப் பாடசாலையின் இணையத்தளம் உருவாக்கப்படுவது அறிந்து பெருமகிழ்ச்சி அடைகின்றோம். தமிழ்மொழி, கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள அறிவாலயம் தமிழ்ப் பாடசாலையின் இம்முயற்சி, காலத்தின் தேவைக்கேற்ப தொழில்நுட்பத்தையும் தமிழ்க் கல்வியையும் இணைக்கும் சிறப்பான முன்னெடுப்பாகும். இவ்விணையத்தளம் பாடசாலையின் கல்விசார் செயற்பாடுகள், நிகழ்வுகள், மாணவர்களின் சாதனைகள் மற்றும் தமிழ்ப் பணிகள் பற்றிய தகவல்களை அனைவரும் எளிதில் அறிந்துகொள்ள உதவும் பாலமாக அமைந்து பயனளிக்கும். இம்முயற்சி வெற்றிபெற அயராது உழைத்த பாடசாலை நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் இணையத்தள உருவாக்கப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். அறிவாலயம் தமிழ்ப் பாடசாலையின் இணையத்தளம் அறிவொளி பரப்பி, தமிழ்மொழி வளர்ச்சிக்கும் அடுத்த தலைமுறையின் முன்னேற்றத்திற்கும் என்றும் துணைநிற்கட்டும்!
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்க் கல்வி!
இப்படிக்கு, என்றென்றும் அன்புடனும் வாழ்த்துகளுடனும்
திருமகள் சிறீபத்மநாதன்
தளிர் தமிழ்ப்பாடசாலை. 15.20.2026.

Scroll to Top